இன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்

சொற்களில் சிக்கிக் கொண்டு தவிப்பதென்பது சாதாரண வதையல்ல. அது விவரிக்க முடியா சுக வதையெனினும் சற்று கொடும் வதை. நான் எழுதிய “பிணைந்திறுகும் பித்து” எனக்கு விடுதலையாய் அமைந்திருக்க, அது ஆனந்தன் அவர்களுக்கு சிறைப்படுத்தும் களமாய் அமைந்திருக்கிறது.



எனக்கு பின்னிரவை நெருங்கும் தருணமென்றாலும், சிங்கப்பூரிலிருக்கும் அவருக்கு அது நள்ளிரவு. சொற்களில் சிக்கிக் கொண்டு தூக்கம் வரலையே கதிர் எனும் அவரின் குரல் எனக்கு அதீத மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் நடுவே ஒரு மென் வலி தந்தது. எழுத்து என்பது இறக்கிவைப்பதென்றாலும், இன்னொருவருக்கு அதீத கனம் கூட்டுவதில் ஏற்படும் வலி அது. ஆனாலும் அந்த வலியை கலந்திறுகும் எண்ணக் குவியல்களோடு பெரும் பாராட்டாய் என் கைகளில் ஏந்திச் சுமக்கிறேன்.
எங்களுள் இருந்தது அந்த பித்தனின் மனம். இன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்.
ஆயினுமென்ன... நல்லா இருப்போம்.
*
பிணைந்திறுகும் பித்திற்கான ஆனந்தனின் விமர்சனம்
...
இன்னும் “save post” செய்து நிரும்பத்திரும்பப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னனைப்பாதித்தென்பதின் மேலாக ஒவ்வொரு வரியும் காட்டும் நிறப்பிரிகை அலதியானது.

உங்கள் ஆகச்சிறந்த “abstract” வரிகள் என்றே இதை அடையாளப்படுத்த
விரும்புகிறேன். இந்த பித்து என்னைப் பிணைந்திறு(ரு)க்கும்
...
“கடந்தேகும்” வாகனங்கள் !!! தூக்கம் வரலயே கதிர்.
...
"கடந்தேகும் வாகனங்கள் ", "இசை மணிகளைப் பிரித்து", இந்த இரண்டு வரிகளையும் என்னால் கடந்த ஒரு மணி நேரமாய் தாண்ட முடியவில்லை.
பொதுவாக வரிகளின் எழுதுபொருளை விடுத்து உவமைகளில் சிக்கிக்கொள்ளாமல் என்னை பாதிக்கும் சம்பவத்தோடு பொருத்திக்கொள்வது என் வழக்கம்... அது சரியோ அன்றோ, அதுவே என் வழக்கம்...
"கடந்தேகும் " என்னும் வார்த்தையை எனனால் கடக்க முடியவில்லை.. பெரியபுராணம், சிவபுராணம் இரண்டையும் புரட்டிப்பார்த்தேன்.. 'எகும்' என்பதற்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் சார்ந்திருப்பது என்றெய் பொருளாக விழைகிறேன். "பூக்கள் எல்லா இடத்திலேயும் பூக்கிறது, அதை மனிதன் பார்க்கும்பொழுது தன்னைக்காகவேய போகிறது என்றனரும் அழகியலைப் போன்றே, " இருளைப் பிய்த்து;கடந்தேகும் வாகனங்கள்;வீசியெறியும் வெளிச்சத்தில்" ஒவ்வொருவரும் அவரவருக்கான ஓவியங்களைத் தீட்டுகிறோமோ ?
"ஓசைகளிலியிருந்து இசை மணிகளைப் பிரித்து" - அடடா, ஆஹா, என்னதொரு அனுபவம்... ஓசை இசையாவது அனுபவிக்கத்தெரிந்ததால் மட்டும்தானே... ஆட்காட்டிவிரலிலே சுற்றும் பரந்தமானன்றி வேறு எந்த மனோநிலையில் அதை அனுபவிக்கமுடியும் ? அதுவும், " வேப்ப மரக்கிளையுடைத்து; ஏணி செய்யப் பிரியப்படுகிற" ஒரு மறவனன்றி வேறுயாரால் முடியும் அது. .. "உலகையாளும் பேரரசனாய்" இருந்த தனி மனிதனும், " பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்" இருக்கக்கடந்தவன் தானே...
இதுவாகிலும் கண்சிமிட்டுகையில் இன்னும் பிணைந்திருகிப் போகாததில் மாயமொன்றும் இல்லை இந்த "அவனுக்கு".
பொதுவாக, நான் பெரிய விமர்சனங்கள் எழுதுவதில்லை, என்னை பெரிய அளவில் பாதித்தாலும்; ஆனால் , இன்று உறக்கம் வருவது எனக்கு "விரலில் சுழலும் இசை"தான்......
குறிப்பு : "ஒவ்வொரு படைப்பிலக்கியமும், தன்னைத்தானே புதிப்பித்துக்க்கொள்ளும், வாசகனை அவனுக்கான தளத்தின் பரிமாணத்தில்... " - ஜெ.மோ. வின், 'விஷ்ணுபுரம்' முன்னுரையை நினைவுபடுத்திக்கொள்கிறேன் ...
-
கவிதை : பிணைந்திறுகும் பித்து - ஈரோடு கதிர்
-
பேரன்பும் நன்றிகளும் ஆனந்தன்.
பி.கு: இனி நான் தொடர்ந்து கவிதைகள் எழுதி ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பு ;)

No comments: