கீச்சுகள் தொகுப்பு - 56



"நம்பிக்கைக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் இடையே நிகழும் உக்கிரமான போர்தான்" மனிதன் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை!



எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே சிங்கப்பூரின் அடையாளம் என்றால் அது மிகையாகாது.

-

தேவதைகள் தேவதைகளாகத் தெரிய இது தேவலோகம் இல்லையென்பதால் தேவதைகள் மகள் வடிவில் மடி சேர்கிறார்கள் இப் பூவுலகில்!



விதிக்கப்படும் மௌனம் கொண்டுவரும் அமைதியும் சில நேரங்களில் நன்றாகத்தான் உள்ளது!

-

சுயநலத்திற்கு வாய்ப்பற்ற தருணங்களில் சிறிது பொதுநலமும் பேணப்படுகிறது!

-

விதவிதமாய் ஃபேஸ்புக்கில்காலை வணக்கம்சொல்ற மனிதர்கள் குறித்து இது வரைக்கும் யாரும் ஆராய்ச்சி செய்து Ph.D வாங்க முயற்சி செய்யலையா?

-

பார்வையாளர்கள் மட்டுமல்ல, Twitter, FB மக்களும் எதைப் பேசவேண்டும் என்பதில் தொடர்ந்து வெற்றியடைகிறார்கள் டிவி (வி)வாத தயாரிப்பாளர்கள்!

-

பகல் முழுக்க சண்டையிடும் அம்மாவும் மகளும், அதிகாலைக் குளிரில் படுக்கையில் பாசமாய்ப் பிணைந்து கிடக்கையில் தோன்றுகிறது.....

-

"கைப்புள்ள கவனமா இருந்துக்கோ, சரி தப்புனு ஒருத்தருக்கு சப்போர்ட் பண்ணி சப்பாணி ஆயிடாதே!"

-

வீடென்பது சுவர்களும், உறவுகளும், பொருட்களும் மட்டுமேயிருக்கும் இடமன்று. இன்னும் ஏதோ ஒன்று கூடுதலாய் இருக்கும் இடம்!

-

அரசியல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ ஒருவன் 'அவர்களுக்கு எதிராகவே' செய்து கொண்டிருக்கிறான். #மீள்

-

வாழ்க்கையெனும் ஒற்றைச் சொல்லுக்கு இன்னுமொரு அர்த்தம் இருக்கின்றதென விரல் பிடித்துச் சொல்லித்தரும் தோழமையும் ஒரு ஆசான் தான்!

-

படுக்கை வசதியுள்ள ரயில் பெட்டியில் பகல் நேரத்து பயணிகள் காட்டும் வித்தைகளென்பது எழுதித்தீராதொரு இலக்கியம்

-

தலைக்கு மேலே வெள்ளம் போனால், சாணென்ன முழமென்னஎனச் சொன்னவர் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தவராகவும் இருக்கலாம்!

-

ஒரு காலத்தில் ரூ.25-க்கு சோறு தின்ன ஹோட்டலில், இப்போது காபி 25 ரூபாய் என்கிறார்கள்! நாம் வளர்ந்ததைவிட, வேகமாய் பணம் தேய்ந்திருக்கிறது!

-

No comments: