கீச்சுகள் - 43



இந்த வருசமாச்சும் ஓசில வர்ற டைரியை முழுசா பயன்படுத்தனும்” #புத்தாண்டு_சபதம்


*

காமம் நிதர்சனமானது, வெகு இயல்பானது, மிக அழகானதும் கூட! ஆனால் அது ஒரு போதும் பலாத்காரத்தில் கிடைத்துவிடாது!


*

எப்போதும் நீங்கள் விரும்பிய சொற்களையே நான் உதிர்க்க வேண்டுமென்றால், உங்கள் மூளையும், நாக்கும் என்னிடம் இருக்கவேண்டும்!


*

நாமே விரும்பா ஒரு மனநிலைக்குள் ஆட்படுகையில், சட்டென சாலை கடந்து எதிர்சாரிக்கு ஓடிவிடுவதுபோல, கணப்பொழுதில் கடந்து, மறுபக்கம் நின்று கவனிப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால், அதில் என்ன கொடுமைன்னா... அது அவ்வளவு எளிதில் வசப்படுவதில்லை.

· 

உண்மையை எழுதி புனைவு எனச்சொல்வது கோழைத்தனம் பொய்யை எழுதி உண்மை எனச்சொல்வது அயோக்கியத்தனம்!

*

இருக்கையைச்சுற்றி கண்டகண்ட பொருட்கள் சூழ இருப்பவன்பிசியானவனாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை. சோம்பேறியாகவும் இருக்கலாம் #வாக்குமூலம்


*

முளையில் கிள்ளியெறிய வேண்டியதை மூளை வரை கொண்டு போறதுதான் பல சிக்கல்களுக்குக் காரணம்!

*



ஒவ்வொரு முறையும் விடைபெற்ற பின்தான் புரிகிறதுவிடை பெறுதலுக்கான வார்த்தைகள்இன்னும் சற்றே கனமாய் இருந்திருக்கலாம்!

*

நட்சத்திரங்களின் முத்தங்களுக்கே குழைந்து கிடக்கும் குளிர்ந்த இந்தக் கரிய இரவு தாமதித்து வரும் நிலவின் தழுவலை எப்படித் தாங்குமோ!?

*

இங்க ஒரு வீட்டு டிவில 'கலா மாஸ்டர்' சவுண்ட் கேட்குது. அட...... ரசனைக்குப் பொறந்தவங்களே.... இன்னுமாய்யா நீங்க 'மானாட மயிலாட' பார்க்குறீங்க!?

கலைஞர் தாத்தா கூட பார்க்கிறத நிறுத்தியிருப்பாரே!?

*


3 முறை கடித்து ருசியறிந்த பேராசை பிடித்த கொசு 4ம் முறையாய்க் கடிக்க வந்தது. பொறுத்தது போதுமென பொங்கியெழுந்ததில், தக்காளி சட்னி ஆகிவிட்டது!

*

சில நண்பர்கள் தம் மெயில் ID கொடுத்து பாஸ்வேர்டும் கொடுக்கிறார்கள். தெரியாமதான் கேக்குறேன். ரகசியமே இல்லாம வாழுறதெல்லாம் ஒரு வாழ்க்கையா பாஸு

*

பசி இனிது...!

*

அந்த சுடு முத்தம் சற்றே குளிர்ந்து கிட்டாதோ வெட்டவெளி வெயில் மழையில்!


*

பிராக்டிகலா இருன்னு சொல்வாங்க, ஆனா அப்படி இருந்துட்டா அப்படி இருக்கச் சொன்னவங்களுக்கே பிடிக்கவே பிடிக்காது! :)

*

அளவுக்கு மிஞ்சினால் அன்பும் வம்பு ஆகும்!


*

கொள்ளல் எளிது, களைதல் கடினம் - பகை




*

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பானு அடிக்கிறவன்தான் சொல்லுவான்னு பார்த்தா! பல இடங்களில் அடிவாங்கினவனும் அதையே சொல்லிக்கிறான்!


*

முத்தம் போல் இனிதாவது எங்கும் காணோம்! :)


*

டிசம்பர்ல குளிக்கிறவன் வீரன்! அதுவும் பச்சைத் தண்ணில குளிக்கிறவன் மாவீரன்! :)


*

முகவரி அறியாமல் எழுதத் துவங்கிவிட்ட இந்தக் கடிதத்தை எந்தச் சொல்லில் முடித்தாலென்ன!?


*

பிள்ளைக்கு சோறூட்டும் போது மிஞ்சும் கவளத்தின் ருசி அமுதம் என அறியப்படுகிறது!


*

மலராய் நிலவு வெளிச்ச வாசனையோடு... தேனெடுப்பதும் சூடிக்கொள்வதும் அவரவர் விருப்பம்!


*

சுமார் 72 மொபைல் போன்களை சார்ஜ் செய்ய ரெண்டே ரெண்டு ப்ளக் மட்டுமே வைக்கும் ரயில்வேயின் சிக்கனம் கண்டு வியக்கேன்.


*

ஒருவரைகெட்டவன்என அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். ’நல்லவன்என்பதற்கு மட்டும் அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்.


*

கார்த்திகை மார்கழியில் பனியோடு, மழையும் பெய்யும் பருவ காலத்திற்கு மாறி விட்டோம். பருவத்தை நம்பி பயிர் செய்வோருக்கான சோதனைக் காலம் இது!


*

முத்தம் ஒரு மொழி!


*

எல்லோரையும்போல சிலரைச் சட்டெனக் கடந்து போக முடிவதில்லை. கவனித்தால் கற்றுக்கொள்ள ஏராளம். சக மனிதனும் ஒரு புத்தகம்தான்!


*

பொரியலுக்குப் பதிலா ஒதுக்கிவெச்ச மொளகாத் தோல திங்கிறதெல்லாம் என்னபிசிவாழ்க்கையோ!? #ஸ்ஸ்ஸோ ஸேட்


*

ஒரு லோக்கல் சானல் விளம்பரத்தில் ஒரு மருத்துவமனைப் பெயரைச்சொல்லிமருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பாய்கள், ஆயாக்கள் தேவைனு விளம்பரம் செய்றாங்க....

நல்லவேளைநோயாளிகள் தேவைனு எதும் கேக்கல! :)


*

சோளம் விளைஞ்சு நிற்கிற காட்டில "காலி இடம் வாடகைக்கு"னு போர்டு போட்டிருக்காங்க. காலி இடத்துல பால் கெடைக்குமோ!?

*

அவள் அழகியாய்த் தெரிவதும் இவன் அழகனாய்த் தெரிவதும் வடிவங்களால் அல்ல வழியும் பிரியங்களால்!


*

கவுண்டமணி இப்ப இல்லைனு ஏங்குறோம். ஆனா கவுண்டமணி இப்போது இருந்தாலோ, வந்தாலோஏங்குற அளவுக்கேஏற்றுக்கொள்வோமா!?

*

நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்டேட்டஸிலிருந்து ஒரு வார்த்தைனு யாராச்சும் ஒருத்தர் ஃபேஸ்புக்கில் போடும் காலம் வெகு தூரத்தில் இல்லை!


*


ஒன்றும் அவசரமில்லை.... முதலில் நான் என்னைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அப்புறம் உங்களைப் புரிந்துகொள்வது பற்றிப் பேசலாம்! :)




*

ரொம்ப பிசியா இருக்கிற அன்னிக்கெல்லாம், ரொம்ப கம்மியா வேலை நடக்குது! #ஙே

*
கொஞ்சம் எஞ்சிய ஒரு சுண்டலை நசுக்கி உதிர்த்து, ஊர்ந்து போகும் எறும்புகளின் தடத்தில் இட்டேன். தனித்துப் பயணித்திருந்த எறும்புகள், தெரு நாய்கள் போல் அடித்துக் கொள்ளாமல் ஒன்றுகூடி தங்களைவிட பல மடங்கு பெருத்திருந்த தம் உணவைச் சுமந்து கொண்டு மெல்ல பயணித்துக் கொண்டிருக்கின்றன.

எறும்பும் கற்றுக்கொடுக்க முடியும், கற்றுக் கொள்ளத்தான் கொஞ்சம் மனது வேண்டும்!

*

குளிரில் நடுங்குகிறது இவ்விரவு எவர் அணைப்பில் இது சூடேறுமோ!


*

புள்ளிகள் போதும் எனக்கும் உனக்குமான எல்லா உரையாடலுக்கும்….........

*
முக்கால்வாசி மினி பஸ்கள் டீசல் இல்லாம கூட ஓடிடும் போல, இளையராஜா பாட்டு இல்லாட்டி ஓடாது. # மாங்குயிலே பூங்குயிலே..


*

1 ரூ பாக்கிக்கு நாலணாக்குப் பெறாத நமுத்த சாக்லெட் தர்றவங்களை அந்நியன் சாக்லெட் கொப்பரையில் நனைத்து செவ்வெறும்புக் குழியில் போட்டிருக்கலாம்

*

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரும்பிய சொற்களும், கிள்ளியெறிய வேண்டியதும் மிகவும் அருமை...

வாழ்த்துக்கள்...

MS VIJAY said...

விரும்பிய சொற்களையே !

Comment : ஏன் சார் அந்த மூளையும், நாக்கும் உங்ககிட்ட இல்லையா ! ஒருவருடைய கருத்துக்களை பதிவு செய்ய அவருடைய நாக்கும் , மூளையும் தேவையில்லை . ஆழ்ந்த ஆய்வும் தூய சிந்தனையும் ,இருந்தாலே போதும்.

மகிழ்நிறை said...

toooooooooo much sir .எத்தனை தான் ஞாபகம் வைத்துகொண்டு கமென்ட் போடுறது.எதை படிச்சாலும் fact,fact,fact
.எல்லாவரியையும் பத்தி நானும் எவ்ளோ தான் எழுதுறது.விகடன்ல வலைபாயுதே படிச்ச effect .