கல்லூரி பாடத்தில் எனது கவிதை



கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு அனுபவம் கிட்டுகிறது. அந்தக் கல்லூரிகளோடு ஏதோ ஒரு வகையில் என்னை தொடர்புபடுத்திக்கொள்ளவும் முடிகிறது. சமீபத்தில் பேசும் வாய்ப்புக் கிட்டியதில் கூடுதல் மகிழ்ச்சியை அளித்த இடங்களில் கோபி கலைக் கல்லூரியும் ஒன்றென்பேன். அதற்கு மிக முக்கியமாய் இரண்டு காரணங்கள்அந்த காரணங்கள் என்னெவென்பதற்கு முன்னால் ஒரு முன்கதைச் சுருக்கம்

முன்கதைச் சுருக்கம்:
1991ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்துவிட்டு, பொறியியல் படிப்புக்குத் தேறமாட்டேன் என்பதால் ஆர்ட்ஸ் காலேஜ்தான் என முடிவானபோது முதலில் சேர விரும்பித் தேர்ந்தெடுத்த கல்லூரிகோபி கலை அறிவியல் கல்லூரி”. விண்ணப்பம் வாங்கி இளங்கலை வேதியியல் படிப்புக்கு அங்கு விண்ணப்பிக்கச் சென்ற நண்பனிடம் கொடுத்து அனுப்பினேன். பல நாட்கள் கழிந்தும் சேர்க்கைக்கான அழைப்பு வரவேயில்லை, இத்தனைக்கும் சிபாரிசு எல்லாம் கைவசம் இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில் விண்ணப்பம் வரவில்லை எனத் தெரிந்தது. அந்த நல்லவனை, அதுதான் அந்த நண்பனை நெருக்கி விசாரித்ததில் அந்த நல்லவன் அதை தொலைத்துவிட்டிருந்தது தெரிந்தது.

அதன்பின் இன்னும் இரண்டு கல்லூரிகளுக்கு அலைந்துதிரிந்து இறுதில் ஈரோட்டில் ஒரு கல்லூரியில் வேதியியல் பிரிவில் இடமில்லையென்று கனிணி அறிவியல் பிரிவில் இடம் கொடுத்தார்கள். ஆனாலும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமுண்டு. ஏக்கத்திற்கான மிக முக்கியக் காரணம், அந்தக் காலத்தில் அது ஒன்றுதான் இந்தப் பகுதியில்இருபாலர் கல்லூரி

காரணம் 1 :
கனவாய் உறைந்து போயிருந்த கோபி கலை அறிவியல் கல்லூரியிலிருந்து ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அருமை நண்பர் திரு.பரமேஸ்வரன் அவர்களின் மூலமாக என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துவாழ்வும்பொறுப்பும் நம்மிடமேஎனும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். சுமார் 1500 மாணவ மாணவியர்கள் அமர்ந்திருந்த மேடை மிகப் பிரமாண்டமான உணர்வைத் தந்தது என்றால் மிகையில்லை. இவ்வளவு மாணவ மாணவிகளிடம் பேசுவதுதான் இதுதான் முதல்முறை. விழாவில் எந்த அறிமுகமின்றி நேரடியாக பெயர் சொல்லி பேச அழைக்கப்பட்டபோது அங்கு எழுந்த உற்சாகமான கைதட்டல் எனக்கு புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.




காரணம் 2:
சில மாதங்களுக்கு முன்பு கோபி கலை அறிவியல் கல்லூரியில் இருந்து பேராசிரியர் முனைவர். மகுடேஸ்வரன் அழைத்திருந்தார். எனதுஒரு ஏழு மணி எழவு” கவிதை முதலாம் ஆண்டு தமிழ் பாடப்புத்தகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.  


நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது கவிதை இடம்பெற்றிருந்த இருந்த இரண்டு புத்தகங்களையும் அளித்தார். பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது விழாவில் நன்றியுரையாற்றிய உதவிப்பேராசிரியர் முனைவர். சுந்தரமூர்த்தி

சார் உங்க கவிதையை நான்தான் பாடம் நடத்தினேன்என்றார்.

கூட்டத்துல கலந்துக்கிட்ட ஸ்டூடண்ட்ஸ்க்கு இது பாடத்தில் உண்டுங்ளா!?”

ஆமாம்

பேச அழைத்தபோது எழுந்த கைதட்டலுக்கு காரணம் புரிந்தது.

கொஞ்சம் தயங்கிக் கேட்டேன்

இந்தக் கவிதை ஜஸ்ட் படிக்கிறதுக்கு மட்டும் தானே!?”

இல்லைங்க, பரிட்சையிலும் கேள்விகள் வரும்என்றார்

(அப்போது  ’அந்தக் கவிதையில் கேள்வி எதும் கேட்டா எனக்கே கூட பதில் எதும் வராதே, பசங்க பொண்ணுங்க நெலமை எப்படியிருக்கும்” எனத் தோன்றியது கொஞ்சம் ஓவர்தான் எனப்பட்டது)

கோபிக் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

-

10 comments:

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

அசத்துங்க சாமி

தினேஷ் பழனிசாமி said...

ஏண்ணே... நாம ஏன் புரொபஸர் வேலைக்கு ட்ரை பண்ணக் கூடாது?

Prapavi said...

அந்த நாள் நினைவுகள்! மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா.

க.பாலாசி said...

ரொம்ப சந்தோஷம்... எத்தனப்பசங்க கேள்வியெல்லாம் பாத்து திட்டப்போறாங்களோ... வாழ்த்துகள்...

KSGOA said...

நீங்கள் படிக்க விரும்பிய கல்லூரியிலேயே உங்கள் கவிதை பாடமாக.......மனமார்ந்த வாழ்த்துகள்.....

Umesh Srinivasan said...

இருபாலார் கல்லூரியில படிக்கத்தான் கொடுத்து வைக்கல்ல.இந்த முறை ஆட்டோகிராஃப் போட்டீங்களா? அதில் இருபாலாரும் இருந்தாங்களா?

Edhayan said...

நீங்கள்... இன்னும் பல உயரங்களை தொட ..
அன்பான வாழ்த்துக்கள்....