கீச்சுகள் - 40


உலகில் அதிகமாக பயமுறுத்துறது யார்னா.. நாம ஃபுல் மீல்ஸ் வாங்கி செம கட்டுகட்டும்போது, டயட்னு சொல்லி எதிர்ல 2 சப்பாத்தி மட்டும் சாப்பிடுறவங்க

-

முகவரிகள் தேடிக்களைத்த பொழுதொன்றில் மிஞ்சியிருக்கும் கடிதங்களைப் பார்க்கிறேன் அவற்றில் சில முகவரியற்றவை!

-

சிக்னல்ல பச்சை விழுந்தா எங்கியோ கடைசில நிக்கிறவங்களுக்கு பளிச்சுனு தெரியுது, ஏன் மொத வரிசையில நிக்கிறவங்களுக்கு தெரியவே மாட்டேங்குது?



பெரிதாகக் குறையொன்றுமில்லை... மனது விரும்புவதைச் செய்ய மனதே தடை போடுவதைத் தவிர!

-

புதுப்படங்கள் குறித்துச்சொல்கையில் சில படங்களை, ’தியேட்டர்ல பாருனு சொல்றாங்க. தியேட்டரா, திருட்டு DVDயானு மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க!

-

எல்லாச் சொற்களையும் அவசரமாய் அதன் நேரடிப்பொருள் கொண்டு அணுகவேண்டும் என்பதில்லை. சில சொற்களைப் புத்தியால் அலசுவதைவிட மனதால் அலசலாம்!





காமம் நோயெனின்... காமமே மருந்து!

-

இன்னும் கொஞ்சநாள்ல எல்லா ஊர்லயும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களைவிட நகைக்கடையும், அடகுக்கடையும் அதிகமாயிடும்னு தோணுது!




பறக்க.. இறக்கை விரித்த குருவிக்கு பெரிதாய் என்ன புகார் இருந்துவிடப்போகிறது வானத்தின் மேல்..?

-

பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க, இப்ப உப்பு, எலுமிச்சை இருக்கானு கேக்குறாங்க. அடுத்து அரிசி இருக்கானு கேட்டு சமையல் குறிப்பு சொல்வாங்களோ?

-

குருவை சிஷ்யன் தீர்மானிப்பதில்லை உண்மையில்.... குரு தான் சிஷ்யனைத் தீர்மானிக்கிறார்.

-

ரோட்ல ஓடுற பொண்ணசட்டையை வீசி இழுத்துட்டுப்பூமெக்ஸ் ப்பூமெக்ஸ்னு பனியனுக்கு விளம்பரம் பண்ணுறது உங்களுக்கே அநியாயமாப் படலையா?



விமர்சகர்களைவிட அடிப்பொடிகளிடம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்!

-

நேற்றுகள் கடந்தன இன்று கடக்கிறது! பிறகென்ன..... நாளையும் தான்!

-

"இந்தா... உங்களுக்கு இவ்ளோ நேரம் தான்என மழையை விற்பனைப் பொருளாக்கும் வரை மனிதன் அமைதி கொள்ளமாட்டான்.

-

தன்னம்பிக்கையின் உச்ச கட்டம் எதுவென்றால், கொஞ்ச நாளா IRCTC தளத்திற்குள்ளே போனால் ’Shopping’ எதும் பண்றீங்களானு நம்மகிட்டே கேட்பதுதான்!



புல்லாங்குழல் விற்பவனுக்கு எல்லா ராகங்களும் தெரிய வேண்டியதில்லை!

-

ஏசியாநெட்ல மோகன்லால், சுரேஷ்கோபி, சரத்குமார் நடிச்ச படம் ஓடுது. ரொம்ப நேரம் MCR வேட்டி விளம்பரம்னு நினைச்சேன்.

-

சமீப ஆண்டுகளில் அதிகமாக விலை உயர்ந்தது..... 'பெட்ரோலா?' அல்லது 'பரோட்டாவா?' ஆனாலும் என்ன்னா கூட்டம்!!!?

-

வாழ்க்கையை ஆளத் தெரியாதவன், வாழ்க்கையை எளிதாகக் கையாள்பவன் மேல் முதலில் கொள்வதுபொறாமை’!

-

புறங்கூறுதல்மட்டும், ஏன் எப்போதும் சர்க்கரையாய் இனித்துத் தொலைக்கிறது.







கொதிநிலையில் குளிர்விக்கத் தேவை ஒரு சொட்டுக் கண்ணீர் அல்லது ஒரு முன்னுச்சி முத்தமேனும்...

-

மழை வந்திருப்பதாக காற்று சொல்லிவிட்டுப் போனது.
தான் வந்துவிட்டேனென மழை சொல்லாதவரை அது மழையில்லை!

-

காத்தால 5 மணிக்கு, கோபிநாத் மாதிரி கோட் போட்டுட்டுக்கூட வாக்கிங் வாங்க,
ஆனா ஃபாடி ஸ்பிரே போட்டுட்டு மட்டும் வராதீங்க, தும்மல் தும்மலா வருது

-

யாரையாச்சும்டென்சன்பண்ணனுமாஇதுக்கு டென்சன் ஆகாதேனு கொஞ்சம் டென்சனோட சொல்லுங்க, அவருலெவன்சன்ரேஞ்சுக்கு டென்சனாயிடுவார்!



இன்னும் காட்டாமல் பதுக்கிவைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடலாம்

-

கண்ணாலம் காட்சிக்கு இளசுங்க, யூனிபார்மா துணி போட்டுக்கிட்டு வந்தா, எதோ துணிக்கடைல வேலை செய்றவங்களாட்டருக்குதுனே தோணுது! :)


-

2 மணிக்கு கொளுத்தின வெயிலையும், 4 மணிக்கு கொட்டுற மழையையும் பார்க்கும்போது அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலும்எதுவும் நடக்கலாம்னு புரியுது.

-

இளமை வரை வயது கூட தைரியம் கூடுகிறது. இளமைக்குப் பின் வயது கூட தைரியம் குறைகிறது.

-

காலை 9-10.30 முகூர்த்தத்துக்கு, 8 மணிக்கே வந்து சாப்பிட்டு 9 மணிக்கு ஆபிஸ் போற உறவுகளும்-சுற்றமும்-நட்பும் கொண்டதும்தான் நம்ம ஊர் கல்யாணம்!

 
ஏதுமற்ற இரவில் துணைக்கு கொஞ்சம் இருள் மட்டும் இருக்கட்டுமே!

-

கூடங்குளத்தின் மின் உற்பத்தியாகும்வரை கடன் கிடையாதுனு பொட்டிக் கடையில எழுதி வைக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவரு... சொல்லிப்புட்டேன்... ஆமா!

-


5 comments:

Unknown said...

கீச் கீச் .. ஒலிக்கிறது இனிமையாக ...!

Anonymous said...

வணக்கம்
பதிவு பற்றிய திறனாய்வு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

கீச்சுக்கள் அருமை அண்ணா.

ராஜி said...

நேற்றுகள் கடந்தன இன்று கடக்கிறது! பிறகென்ன..... நாளையும் தான்!
...
வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு ஈசியா சொல்லிட்டு போக முடியுது

Umesh Srinivasan said...

வரிக்கு வரி வித்தியாசம் கலந்த சுவாரஸ்யம். காலைபொழுதைக் கலகலப்பாக்கியமைக்கு நன்றி.