காபி வித் செல்லி - ஃபேஸ்புக் தொடர் பேட்டி


முன்னறிவிப்பு:

ஃபேஸ்புக் தோழமை செல்லி ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நட்புகளோடு காபி வித் செல்லி என ஒரு தொடர் பேட்டிகளை உருவாக்கி வருகிறார். பேட்டியில் கேள்விகளைவிட அதை தொடர்ச்சியாய் தொடர்புபடுத்திய விதம் சுவாரசியம் மிகுந்ததாகவே இருந்தது. இடக்குமடக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கும் பயிற்சியாகவும், வித்தியாசமான அனுபவமாகவும் எனக்கு அமைந்தது…
-

COFEE WITH CHELLI ..Season 1 with Erode Kathir...A Real interview

செல்லி : வணக்கம் அன்ட் அஹெ ம்...க்கும்... கட் கட் கட் 

டைரக்டர் : கட் கட் எல்லாம் நான் தான் சொல்லணும் மேடம் ..நீங்க ஏன் சொல்றீங்க?

செல்லி : பாருங்க, உங்க வேலைய கூட நானே செய்ய வேண்டியிருக்கு. அதான் தொண்டை ட்ரை ஆய்டுச்சு பேச முடியல.. 

டைரக்டர் : இந்த லொள்ளுக்கு தொண்டை இல்ல மண்டையே ட்ரை ஆகும் (என முணுமுணுத்தபடி) மேடம்க்கு தண்ணி குடுங்க பா

செல்லி : அப்படியே டச் அப் ஆளை வரசொல்லுங்க 

டைரக்டர் : என்ன பண்ணினாலும் இருக்கற மூஞ்சி தான இருக்கும் மேடம் 

செல்லி : ஹலோ என்னது ?

டைரக்டர் : உங்களுக்கு மேக் அப்பே தேவை இல்லைன்னு சொல்ல வந்தேன் 

செல்லி : சரி சரி ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்

டைரக்டர். : அதான் நீங்களே சொல்லிடீங்களே ஆரம்பிங்க

செல்லி : வணக்கம் அன்ட் வெல்கம் டு காபி வித் செல்லி சீசன் 1..இந்த வாரம் நம் நிகழ்ச்சில கலந்துக்க போகிற அந்த ஃபேஸ்புக் பிரபலம் ,..இவர் அரசியல்,காமடி ,சிந்தனைகள் ,பொதுசேவை இப்படி எல்லாத்தையும் கலந்து கட்டி பதிவுகள்,கட்டுரைகள் போடும் சிறந்த பதிவாளர்களில் ஒருவர், ஈரோடு சிங்கம், ஃபேஸ்புக் சோ.... ஒன் அன்ட் ஒன்லி ஈரோடு கதிர் அவர்கள்..

செல்லி : வாங்க வாங்க கதிர் அவர்களே ..மோர் ,எளனி எதனாச்சும் குட்டிக்கறீங்களா


கதிர் : என்னங்க காத்தால வயலுக்கு களை எடுக்க வந்தாப்ல கேகறீங்க..அதான் காபின்னு போர்ட் போட்டிருக்கீங்களே ஒரு கிளாஸ் காபியே குடுங்க..

செல்லி : ஹிஹி..நல்லா தமாசா பேசறீங்க?..சரி சரி நிகழ்ச்சிக்கு போகலாம்

செல்லி : நான் உங்கள பத்தி அறிமுகம் செஞ்சு வெச்சேன் ..நீங்க உங்கள அறிமுக படுத்தி கொண்டா எப்படி அறிமுக படுத்துவீங்க?

கதிர் : நீங்கள் எதிர்பார்த்தது, எதிர்பார்க்காதது ஆகியவற்றைச் சுமந்து திரியும்நகரத்தில் பாய்ந்த ஒரு கிராமத்து வேர்

செல்லி : இதை நான் எதிர் பார்த்தேன் ..:) வேர் துளிர் விட்டு ,வளர்ந்து பெரிய விருட்சமாக மாறும் என்றும் எதிர் பார்கிறேன் .

செல்லி : நீங்க நல்லா பதிவுகள் போடறீங்க...நிறைய ஃபாலோயர்ஸ் இருக்காங்க..இப்படி உங்க எழுத்து ரீச் ஆனதுக்கு என்ன சீக்ரெட் னு நினக்கறீங்க?


கதிர் : சிலரின் எழுத்துகளை வாசிக்க நான் அவர்களைத் தேடியதும், அதேபோல் சிலர் என்னைத் தேடியதும்தான். 

செல்லி : எப்படியோ தேடி கண்டு பிடிச்சிடிச்சிட்டோம்..இனி விடறதா இல்லை உங்களை ஹிஹ்..சரி அடுத்த கேள்வி

செல்லி : ஃபேஸ்புக் என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் எனபதை தாண்டி நீங்க இங்கே கண்ட நல்ல விஷயம் என்ன பிடிக்காத விஷயம் என்ன?


கதிர் : இது ஒரு ஊடகமாகவும் நான் பார்க்கிறேன். நல்ல செய்திகளுக்கு கிடைக்கும் பகிர்வுகள் நிறையப் பேரைச் சென்றடைகின்றது. நாகர்கோவிலில், கோவையில் என இரண்டு முறை உயிர்காக்க இரத்தம் தேவைப்பட்டபோது அதை மிக எளிதாக சாத்தியமாக்கியது ஃபேஸ்புக் நட்புகள் மட்டுமே.

பிடிக்காத விஷய்ம்னு சொல்ல்லனும்னா ..நாம் ஒட்டுமொத்தமாய் நம் நேரத்தை பலிகொடுப்பது.

செல்லி : உண்மைதான் நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும் ஒரு புதை குழியில் காலை விட்டதுபோல் தான் இது..நம்மை இழுக்கிறது..ம்ம் சரி.

செல்லி : நீங்க எப்படி அவசர குடுக்கையா இல்ல ப்ளான் பண்ணி பன்ற ஆசாமியா?


கதிர் : அவசரக் குடுக்கைத் தனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருப்பவன்

செல்லி : அப்ப குடுக்கை இல்ல.. அவசர மக்கு நீங்க.ஹிஹ் ..அய்யோ .மக்கு இல்லங்க mug..:)

செல்லி : ஒருத்தர முதன் முதலா பார்க்கும் போது நீங்களா பேச்ச ஆரம்பிபீங்களா இல்ல அவரை பேச விடுவீங்களா?


கதிர் : முதலில் அவர்கள் பேசட்டுமே என்றுதான் நினைப்பேன், எதிர்பார்ப்பேன், அதன்பின் நான் பேசிக்கொண்டேயிருப்பேன்.

செல்லி : அவர்கள் போன பின்னுமா?..சரி சரி டென்ஷன் ஆகாதீங்க அடுத்த கேள்விக்கு போலாம்..

செல்லி : நீங்க ரொம்ப கடினமா நினைக்குற செயல் எது...?


கதிர் : நான் செய்யவேண்டும் என்று விரும்புவதை என்னைச் செய்ய வைப்பது.

செல்லி : அருமை யான பதில்

செல்லி : உங்க பலம் என்ன பலவீனம் என்ன?


கதிர் : பலம் : இது போதும் என்று நிறைந்துவிடாதது
பலவீனம் : நேரம் தவறுதல்

செல்லி : ஆமாம் சனிக்கிழமை பதில்கள் தரேன்னுட்டு ஞாயிற்று கிழமை தானே தந்தீங்க..

செல்லி : சரி ..இப்ப நீங்க தான் மார்க் சுகர் பர்க்ன்னு வெச்சுகோங்க..ஃபேஸ்புக்குல என்ன மாதிரி மாற்றங்கள கொண்டு வர முயற்சிப்பிங்க.


கதிர் : 5000 நட்புகளுக்கு மேல் அனுமதிப்பேன்

செல்லி : ரொம்ப பெரிய மனசு

செல்லி : . ஆண் பெண் நட்பு பத்தி உங்க கருத்து என்ன?


கதிர் : கூடுதல் ஆர்வத்தையும், சுவாரசியத்தையும், ரகசியத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பது.

செல்லி : ஃபேஸ்புக்ல உங்களை கவர்ந்த ஆண் யார் பெண் யார்..இதற்கு தனிப்பட்ட நட்பை தவிற வேறு விஷயங்கள் உங்களை அவர்களை தினமும் பார்க்க வைப்பது.

கதிர் : பெண் : அமுதா தமிழ் Amutha Thamizh (தன்னை முன்னிறுத்தாது, பலரைத் தொடர்ந்து தொடர்ந்து முன்னிறுத்துவதற்காக)

ஆண் : நா சாத்தப்பன் (ஒரு தகவலை இத்தனை சுவாரசியமாகத் தரமுடியுமா என்பதும், அவர் அடிக்கடி மாற்றும் படங்களும்)

செல்லி : அருமையான தோழமைகள்..வாழ்த்துகள் இருவருக்கும்

செல்லி : நட்பை தேர்ந்தெடுக்க நீங்க வைத்திருக்கும் அளவு கோல் என்ன?


கதிர் : அன்பும் பரஸ்பர புரிதலுமே! அவர்களை நான் அவர்களாகவே ஏற்றுக்கொள்ள முயல்வது போன்றே, அவர்களும் என்னை என்னையாகவே ஏற்றுக்கொள்வதற்கான குறைந்தபட்ச முனைப்பு

செல்லி : . இப்ப நான் சில பேர்களை எழுதி இந்த டப்பால போட்டிருக்கேன்..அதுலேர்ந்து நீங்க மூனு பேரை எடுக்கனும்.. அவங்க கிட்ட நீங்க ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சு ஏதோ சொல்லாம போன ஒரு விஷயத்தை இங்கே சொல்லனும்..

கதிர் : வானவன் மாதேவி – “வாழ்க்கை அளித்த கொடுமையான சவால்களையும் கடந்து, ஆதவ் அறக்கட்டளை மூலம் நிறையப்பேர் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்காக உங்களை வணங்குகிறேன்.”

ரவிநாக் – “நிறைய வித்தியாசமான தகவல்களை, தொடர்களை எழுதி வருகிறீர்கள். அவற்றை ஒரே இடத்தில் தொகுத்து வைக்கலாமே!”

ரத்னவேல் நடராஜன் N.Rathna Vel – “நண்பர்களை அடைகாப்பதில் மனதால் ஒரு ஆலமரமாகவே படர்ந்திருக்கின்றீர்கள். அவ்வப்போது நானும் இளைப்பாறுவதில் மகிழ்கிறேன்.”
..

செல்லி : உங்க நண்பர்கள் உங்களை பத்தி என்ன நினைக்குறாங்க?

கதிர் : நான் எப்படியிருக்கின்றேனோ அதைவிட கூடுதலாக சில நேரங்களிலும், குறைவாக சில நேரங்களிலும் நினைக்கின்றார்கள்.

செல்லி : ஒரு நல்ல தராசு வாங்கி தந்துடுவோம்..சரியா எடை போட..:)

செல்லி : மறுபடியும் ஃபேஸ்புக் பத்தின ஒரு கேள்வி..இதுல பிடிச்ச விஷயம் என்ன பிடிக்காத விஷயம் என்ன?


கதிர் : பிடித்த விசயம் : நாம் எழுதியதை முழுக்க புரிந்து கொண்டபின், அதை ஒட்டியோ வெட்டியோ வரும் நேர்மையான கருத்துகள்
பிடிக்காத விசயம் : படிக்காமலே கூட லைக் இடுவது, சில சமயங்களில் கமெண்ட் இடுவதும்.

செல்லி : ஆமா ..ஒரு பக்கத்துக்கு எழுதி போட்டிருக்க கூட மாட்டோம்..உடனே அடுத்த செகன்ட் லைக் போடுவாங்க..சூப்பர்னு கமென்ட் வேற வரும்..என்ன சொல்றதுன்னே தெரில.இவங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்ல..ம்ஹூம் 

செல்லி : உங்களுக்கு நிறைய ரிகுவெஸ்ட் வருது..அக்சப்ட் பண்றீங்க ரிஜெக்ட் பண்ரீங்க..அப்படி நீங்க யாருக்காவத்உ ரிகுவெஸ்ட் கொடுத்து காத்துகொண்டிருத அனுபவம் இருக்கா?..


கதிர் : அவ்வப்போது நானும் ரெக்வெஸ்ட் கொடுத்து காத்திருந்ததும், இப்போதும் காத்திருப்பதும் நடக்கின்றது.

செல்லி : சீக்ரெட் ஆஃப் சக்ஸன்னு நீங்க எதை நினைக்கறீங்க..
வெற்றியை மட்டுமே எதிர்பார்க்காமல் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வது சீக்ரட் 
வெரி நைஸ் : இப்ப அடுத்த செஷன் ராபிட் ஃபயர் கொஸ்டின்ஸ் ..கம்மான் ரீடர்ஸ் இந்த இடத்துலேர்ந்து நீங்க வேகமா படிக்கனும் 



1
உங்களுக்கு பிடித்த கலர் 
இளம் பச்சை
2.
உங்களுடைய ஃபேபரிட் உண்வு 
பசிக்கையில் கிடைக்கும் எல்லா உணவுகளுமே
3.
பிடித்த கடவுள் 
தன்னலம் போற்றாமல் சக மனிதனுக்கு சேவையாற்றும் எவருமே
4.
பிடித்த உடை 
வேட்டி சட்டை
5.
நீங்க வளர்க்க விரும்பும் செல்ல பிராணி 
என் கை பேசி
6.
நீங்க ஒரு கார்ட்டுன் கேரக்டரா இருந்தா எந்த கேரக்டரா 
இருக்க விரும்பறீங்க 

கார்ட்டூனிஸ்ட்க்கு எது எளிதாக வருகிறதோ அந்தக் கேரக்டர்
7.
உங்களை பொருத்த வரை எந்த தமிழ் ஹீரோ நல்லா டிரெஸ் 
பண்றாருன்னு நினக்கறீங்க 

திரையிலா வெளியிலா!
8.
உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் 
படத்திற்கு ஏற்ப மாறும்
9.
உங்களைக் கவர்ந்த ஆண் 
நான்
10.
உங்களைக் கவர்ந்த பெண்மனி 
கண்களால் சிரிக்கும் எவரும், அந்தந்தக் கணங்களில்

ஹப்பா மூச்சு வாங்குதா ரீடர்ஸ்.?.சரி போய் தண்ணி குடிச்சிட்டு வாங்க..ஒரு ஷார்ட் கமெர்சிஅயல் பிரேக்

வெல்கம் பேக் டு காபி வித் செல்லி சீசன் 1

செல்லி : இப்ப சில குண்டக்க மண்டக்க கேள்விகள்


கதிர் : நீங்க என்ன பார்திபனுக்கு தங்கச்சியா
செல்லி : ஹிஹி நீங்க சத்தியமா வடிவேலு இல்ல..
கதிர் : ஹஹஹ்ஹ்ஹ
சரி கேள்விகளுக்கு போலாம்

1.
கடித்ததில் பிடித்ததுநெல்லிக்காய்
2.
பிடித்ததில் கடித்தது - சின்னவயதில் சட்டைக் காலர்
3.
இழுத்ததில் வந்தது - முடி
4.
விழுந்ததில் கிடைத்தது - தழும்பு
5.
உடைத்தலில் கிடைத்து - உண்டியல் காசு
6.
அவசரத்தில் போட்டது - தொப்பை
7.
அடித்ததில் பிடித்தது - கொசு
8.
சுழற்றியதில் பிடித்தது - அவள் விழிகள்
9.
மாட்டியதில் கிடைத்தது - பிம்பம்- 
10.
வந்ததில் பிடித்தது வாழ்க்கை

ரொம்ப அழகா நச்சுனு இருந்தது ..நன்றி 

சரி இப்ப நிகழ்ச்சியோட இறுதிக்கு வந்திருக்கோம்

இங்கே இருக்குற ரெண்டு பேருக்கு காஃபி அவார்ட் தரணும் யார் யாருக்கு தருவீங்க!


ஆசிரியர் ஃப்ராங்ளின் (அரசுத் துவக்கப்பள்ளியில் பெரும் மாற்றத்தை விதைத்ததற்காக)

கீதா இளங்கோவன் (மாதவிடாய் ஆவணப் படத்திற்காக

சரி இந்த காபி கோபைகளை நாங்க அவங்களுக்கு அனுப்பி வெச்சிடறோம்..

பதிவுகள்,கட்டுரைகள்னு போடவே நேரம் இல்லாத சமயத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையா பதில் போட்டு இந்த பதிவுல கலந்துக்கிட்டதுக்கு நன்றி..


கதிர் : இருள் என்பது சில சமயங்களில் வசதியானதாக இருப்பினும் பொதுவாகவே கொஞ்சம் அச்சமூட்டுவதாகவும், மர்மம் நிறைந்தததாகவும் இருக்கத்தான் செய்கின்றது. 
விடியல் எப்போதுமே உற்சாகம் நிறைந்தது. இன்றைய விடியலும் ஒருவித பிரசவத்திற்கு நிகரனாது. இது நமக்கான பரிசு...
பரிசாய் கிடைக்கும் நாளை வாழ்ந்து கௌரவிப்போம்.
அழகியதொரு தருணத்தை அமைத்துத்தந்து, மனதைக் கிளர்ந்திடச் செய்த செல்லிக்கு அளவில்லா அன்பு!


என்ன ரீடர்ஸ் இந்த பதிவை ரசிச்சீங்களா..மீண்டும் அடுத்த பதிவில் இன்னொரு பிரபலத்தை சந்திக்கும் வரை ஸ்டே டியூன்ட் வித் காபி வித் செல்லி சீசன் 1..


*
”நாமும் ரவுடிதான்” என உணர்த்தப்படும் தருணங்கள் கொஞ்சம் மிரட்சியையும், பயத்தையும், மகிழ்ச்சியையும் தன்னகத்தே கொண்டிருப்பவை.

இப்படியும் பதில் சொல்லவைக்க முடியும் எனக் காட்டிய Chelli Sreenivasan அவர்களுக்கு நன்றி!

அன்பிற்குரிய Amutha Thamizh சாத்தப்பன் நா Vanavan Madevi Ravi Nag N.Rathna Vel Franklin Lin Geeta Ilangovan ஆகிய நட்புகளை பெயர் சுட்டும் வாய்ப்புக் கிட்டியமைக்காக பெருமகிழ்வெய்துகிறேன்!
 _

4 comments:

Rathnavel Natarajan said...

மிக்க நன்றி.

Ramani Prabha Devi said...

very good attempt..

கிருத்திகாதரன் said...

அருமை..பதில்கள் மூலம் சமூக அக்கறை தெளிவாக தெரிகிறது. நல்ல மனிதர்களை அழகாக அடையாளம் காட்டியமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமை:)!