22 Female Kottayam (22 ஃபீமேல் கோட்டயம்)


பெங்களூரில் பணியாற்றும் கோட்டயத்தைச் சார்ந்த ஒரு 22 வயது கேரள நர்சுக்கும், அவளைச் சுற்றிய நான்கு ஆண்களுக்கிடையேயும் சம்பவிக்கும் வாழ்வின் அதிமுக்கிய காலமே இந்தப் படம்.

காமத்தை நேசிப்பாகப் பார்க்கும் ஒரு ஆண், காமத்தை வக்கிரமாக கையாளும் ஒரு ஆண், காமத்தை வியாபாரமாக பார்க்கும் ஒரு ஆண் என மூவரின் மையத்தில் நகரும் நர்ஸ் டெஸ்ஸா கே ஆப்ரகாம். அவர்களின் மத்தியில் வெவ்வேறு சூழல்களில் சிக்குவதும் மீள்வதும், தன்னை நிரூபிப்பதுமான சம்பவங்கள்



வெளிநாடு கனவோடும், கண்களில் நிரம்பிய கருணையோடு, அண்டை வீட்டுப் பெண் போல் இருக்கும் டெஸ்ஸா கே ஆப்ரகாம் எனும் கோட்டயத்தில் பிறந்து பெங்களூரு மருத்துவமனையில் பணியாற்றும் தாதியின் வாழ்க்கையில் நண்பனாய் நுழைந்த ஒருவனுடன் காதல் எளிதாய், கவிதையாய் அரும்புகிறது

காதல் என்பதை உணரும் தருணத்தில், அவர் உதிர்க்கும் “I am not virgin” வார்த்தை மெல்லிய அதிர்வுகளோடு நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பழைய வாழ்க்கையில் ஒரு திருமணம் ஆனவனை காதல் என நம்பி படுக்கை பகிர்ந்து ஏமாறும் தருணத்தில்தான் முதல் முதலாக கெட்டவர்களும் இருக்கின்றார்கள் என்பதை வாழ்க்கை அவளுக்கு கற்றுத்தருகிறது. புதிய காதலனோடு லிவிங் டுகதர் வாழ்க்கைக்கு வருபவளுக்கு அவனோடு அவனைவிட அதிகமாக மது அருந்துவதிலும், படுக்கை பகிர்வதிலும் எந்த மனத்தடையும் இன்றி நகரும் வேளையில், காதலன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள, தனிமையில் பயந்துகிடப்பவளின் வீட்டுக்கு மீட்பனாக வரும் அவனுடைய பாஸ் குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? என்பதைப் போல்  “Can I have sex with u” என்று கேட்கிறான். மறுக்கும் அவளைத் தாக்கி வன்புணர்வு செய்கிறான்.

ஆணைவிட அதிகமாக அசராமல் குடிப்பவள், திடீரென காதலில் விழுபவள், காதலிப்பவனிடம் தைரியமாக ஏற்கனவே தான் இன்னொருவனைக் காதலித்து படுக்கை பகிர்ந்ததைச் சொல்பவள், காதலனோடு படுக்கையை பகிர்பவள், அவனோடு லிவிங் டுகதரில் வாழ்பவள் என இருக்கும் ஒரு பெண்ணின் மேல் ஒரு வன்புணர்வு நிகழ்த்தப்பட்டால், அதை மேலோட்டமாக அணுகும் சமூகம், அதிலிருக்கும் வலியை உணர்ந்திடுமா என்பது ஆச்சரியம்தான்.  ஆனால், டெஸ்ஸா கே ஆபிரகாம் கடக்கும் அந்தச் சில நிமிடங்களை வாழ்பவர்களால் ஒருபோதும், ஒரு பெண் மீது நிகழ்த்தப்படும் வன்புணர்ச்சியை கடந்துபோக முடியவே முடியாது. அந்த சில நிமிட வன்புணர்ச்சியைக் காணும் அத்தனைபேர் மனதில் இதுவரை கேள்விப்பட்ட வன்புணர்வுச் செய்திகள் அனைத்திற்குமான சேர்த்து வைக்கப்பட்ட வலி ஒரு கணம் சுள்ளென்று வலித்துவிட்டே போகும்.

சூழலின் பொருட்டு மறைக்கப்படும் எத்தனையோ வன்புணர்வுகள்போல் இதையும் உடைந்த மண்டை, உடைந்த கைவிரலென உடல் வலியும் தாங்கி வீடு திரும்புபவளின் அடுத்த நாள் விடியலில் மீண்டும் ஏவப்படுகிறது வன்புணர்வு.

தங்களது தவறுகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஆதிக்கம், தான் தவறிழைத்தவன் மீதே வஞ்சமாய் தண்டனையையும் ஏவிவிடும் என்பதே நியதியாக இருக்கின்றதுஇங்கும் நாயகி வஞ்சகத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டு. அரண்டு மிரண்டு கொஞ்சமாய் நிதானித்து, நிலை பெறுகிறாள்.

அவள் பணிபுரியும் மருத்துவமனையில் தன் கடைசிக்காலத்தை நகர்த்தும் ஒரு ஓய்வுபெற்ற ISRO அதிகாரியான முதியவர், அவளின் கண்களில் தெரிந்த, அதுவரையிலும் கண்டிடாத நேர்மையான கருணைக்காக தரும் பரிசு நெகிழ்ச்சியானதும் கூட.

ஒட்டுமொத்தமாய் வஞ்சிக்கப்பட்ட, வதைக்கப்பட்ட பெண்களின் கூடாரமாய் அமந்திருக்கும் சிறஇவளை உருவேற்றுகிறது. அங்கு உடனிருக்கும் தமிழ் பேசும் கைதி ’சுபா’ இவளின் பிரச்சனைகளை ஏற்கனவே அறிந்தவராகவும் இருக்கிறார். இவளை வஞ்சித்தவர்களின் திட்டமும், கொடூரம் ுபா வாயிலாகுழாகப் புரிகிற.

”நாம பொண்ணுங்க ஆயுதத்தோட பொறந்தவங்க
நம்ம பலமும் அது தான்
பலவீனமும் அது தான்” எனச் சொல்லும் ுபா, இவளின் பழி தீர்க்கும் திட்டத்திற்கு உதவிட முன்வருகிறார் அதற்கான விலைக் குறிப்புகளோடு.



சிதைத்தவனையும், வஞ்சித்தவனையும் பழி தீர்க்க, நேசிப்பாய் காமத்தைக் கையாள விரும்புபவனுக்கு விலை கொடுத்து(!), அரங்கேற்றப்படும் பழிவாங்கும் நிகழ்வுகள் நமக்கு புதிதாகவும், அதிர்ச்சிகரமானதாகவும் இருப்பினும் அதை மனது ஏற்றுக்கொள்ளவே செய்கின்றது



Directed : Aashiq Abu | Written : Abhilash Kumar, Shyam Pushkaran | Starring : Rima Kallingal, Fahadh Faasil | Music : Bijibal, Rex Vijayan (BGM)

-0-