புத்தாண்டு கோக்குமாக்குகள்


குறுந்தகவல் மூலமே குடும்பம் நடத்தியவர்கள்கூட புத்தாண்டு அன்று குறுந்தகவலுக்கு காசு எனும் நிலைவந்தபோது”குட் மார்னிங்” கூட சொல்லிக்கொள்ளாதது. 

---

ஆண்டுமுழுதும் குறுந்தகவல் அனுப்பாதவர்கள் கூட, புத்தாண்டு அன்று மட்டும் தங்களுக்கு வந்த வாழ்த்துச் செய்தியில் பி(ப)டித்ததை மற்றவர்களுக்கு அனுப்புவதை சமூகக் கடமையாக நினைப்பது.


---


புத்தாண்டு சங்கல்பம் / உறுதிமொழி (Resolution) எதுவும் எடுப்பதில்லை என மார்தட்டும் நபர்கள் கூட மனதிற்குள் ரகசியமாய் ஓரிரு உறுதிமொழிகளை நினைத்துக்கொள்வது.
 
---

இலவசமாக கிடைக்கும் நாட்காட்டிகளின் எண்ணிக்கையை தனக்கான அந்தஸ்து என நினைப்பது.
 
---

எதுவுமே எழுதப் போவதில்லையென்றாலும், அன்பளிப்பாக கிடைக்கும் டைரிகளை வாங்கி வைத்துக்கொள்வது.


---


இலவசமாக கிடைக்கும் நாட்காட்டிகளின் தலைப்பகுதியில் மாட்டுவதற்கு எளிதாக ஒரு கயிறும் போட்டுக் கொடுத்திருந்தால் வசதி என நினைப்பது. 
 
---

புத்தாண்டு அன்று ஏற்படும் மகிழ்ச்சி, நிம்மதி ஆண்டு முழுதும் இருக்கும் என நினைத்துக்கொள்வது.

---
 
புத்தாண்டு ஞாயிறு அன்றே வந்தாலும், ஆண்டு முழுதும் ஞாயிறாக இருக்காது என்பதில் மட்டும் ரொம்பத் தெளிவாக இருப்பது.

---
 
மிகக் கவனமாக எழுதவதாக நினைத்தும் தேதிகளைக் எழுதும்பொழுது, பல நாட்களுக்கு முந்தைய ஆண்டின் வருடத்தையே குறிப்பிடுவது.
 
---

நாட்காட்டியை புதிதாக மாற்றும் தினமே எனினும் அதிகாலையில் எழுந்து, குளிரில் சிரமப்பட்டு குளித்து, கோவிலுக்குச் செல்வதை பக்தியின் உச்சமாக நினைப்பது.
 
---

8 comments:

vasu balaji said...

கோவிலுக்கு போன கையோட பக்திப் பழமா டாஸ்மாக் போறது சொல்லலையே

யாரோ ஒருவர் said...

உங்கள் எண்ணங்கள் உண்மை,வெளிப்படுத்திய விதம் அருமை.

RAVI said...

கோக்குமாக்கு கோக்குமாக்கா இல்லாம நல்லாருக்குபா...

//கோவிலுக்கு போன கையோட பக்திப் பழமா டாஸ்மாக் போறது சொல்லலையே//

என்னய எப்பிடியோ நல்லா புரிஞ்சு வச்சிருக்காருப்பா :))

cheena (சீனா) said...

அதெப்படி கதிர் - நாம் இயல்பா செய்யற நினைக்கிற செயல்களி எல்லாம் அப்படியே எழுதிடறீங்க - கோக்குமாக்குகள் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

//
குறுந்தகவல் மூலமே குடும்பம் நடத்தியவர்கள்// இப்படி கூட குடும்பம் நடத்தலாமா?

//ரகசியமாய் ஓரிரு உறுதிமொழிகளை நினைத்துக்கொள்வது.// உங்களுக்கு எப்படி தெரிந்தது? கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரியுமோ?

//இலவசமாக கிடைக்கும் நாட்காட்டிகளின் எண்ணிக்கையை தனக்கான அந்தஸ்து என நினைப்பது.//

ஆமாம் கதிர் என்ற ஊட்டுகாரரு கூட அப்படி தான் அவுக கொடுத்தாக இவுக கொடுத்தாகன்னு வீடெல்லாம் நான் சில நாட்களில் கழட்டிடுவேன்..

//எதுவுமே எழுதப் போவதில்லையென்றாலும், அன்பளிப்பாக கிடைக்கும் டைரிகளை வாங்கி வைத்துக்கொள்வது.//

அப்படியே அனுப்பு வையுங்க ஹாப் ரேட்டில் வித்து பாதி பாதி எடுத்துக்கலாம்.. நோட் பண்ணுங்க இனிமே கதிருக்கு யாரும் டைரி கொடுக்காதீங்க..

ஐய்யோ போங்க கதிர் எல்லாத்துக்கும் ஒரு காரணம் கைவசம் வச்சிருக்கீங்க..மத்ததுக்கு அடுத்த மாசம் கமெண்ட் போடறேன்....

சத்ரியன் said...

//எதுவுமே எழுதப் போவதில்லை என்றாலும், அன்பளிப்பாக கிடைக்கும் டைரிகளை வாங்கி வைத்துக்கொள்வது//

கெடைக்கிறவன் வெச்சிக்கிறான். உமக்கென்ன ஓய்?
***

//மிகக் கவனமாக எழுதவதாக நினைத்தும் தேதிகளை எழுதும்பொழுது, பல நாட்களுக்கு முந்தைய ஆண்டின் வருடத்தையே குறிப்பிடுவது.//

என்ன பண்ணச் சொல்றீங்க. எல்லாம் பழக்க தோசம்.

Saravanan TS said...

அருமையான பதிவு.
நமது இயல்பான வாழ்கையை ரசித்துப் பாருங்கள். பல சுவையான தெளிவுகள் கிடைக்கும்.
தொடருங்கள்.....

Unknown said...

//நாட்காட்டியை புதிதாக மாற்றும் தினமே எனினும் அதிகாலையில் எழுந்து, குளிரில் சிரமப்பட்டு குளித்து, கோவிலுக்குச் செல்வதை பக்தியின் உச்சமாக நினைப்பது//

Avlo dhaana? Innum oru vayasu adhigamaa aagudhunga..
Uruppadiya onnum seiyaama oru varusam odi pochengara kavala!