நிழற்படம் தேக்கிய கணம்



அந்தந்தக் கணங்களை
தேக்கிவைத்த நிழற்படங்கள்
படிந்த கோப்பினை
விரல்கள் புரட்டிக்கொண்டிருக்கிறது

தீர்ந்துபோன நிகழ்காலத்தை
உள்ளடக்கம் குறித்து
கவலைகளற்று
இறுமாப்போடு தனக்குள்
கவ்விப்பிடித்துக்கொண்டிருக்கிறது

செத்துப்போய் சேமிக்கப்பட்ட
அந்த நிகழ்காலம்
ஒப்பனையேதுமின்றி
அடைகாக்கப்படுகிறது அதனுள்ளே!

ஆனாலும்….
கண்களின் தேடலில்
விரல்களின் நகர்த்தலில்
ஒரு உணர்வின் மிச்சமோ
ஒரு உறவின் வாசமோ
ஒரு வரலாற்றின் வீச்சமோ
பிரசவமாகிக் கொண்டியிருக்கிறது
சிலநேரம் குறைப்பிரசவமாகவோ
கருக்கலைப்பாகவோ…

~

8 comments:

vasu balaji said...

good one sir!

ragul sri said...

சூப்பருங்ணா,,,,,

நாடோடி இலக்கியன் said...

ரசித்தேன்.

துரைடேனியல் said...

Nice Sir!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - உண்மை உண்மை - இன்று மாலை 4 மணியில் இருந்து இப்பொழுது வரை நானும் என் துணைவியும் மதுரை - 2006 ஆக்ஸ்ட் - 2011 டிசம்பர் - வரை மதுரையில் எடுத்த ப்ல புகைப்படங்களைப் பார்த்து - ஒவ்வொன்றும் எங்கே எப்போழுது எந்த நிகழ்வு - யார் யார் இருக்கிறார்கள் - என அத்தனையும் நினைத்து அசை போட்டு ஆனந்தித்து மகிழ்ந்து ....... இச்சுகம் இந்திர லோக சுகம் கதிர்.....உணர்வின் மிச்சம் - உறவின் வாசம் - வரலாற்றின் வீச்சம் - சுகப் பிரசவமானது. ஆனால் குறைப்பிரசவமும் கருக்கலைப்பும் தவிர்க்க இயலாதவை தான் ...... மறுக்க இயலாது. நல்ல சிந்தனை கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சசிகலா said...

பிரசவமாகிக் கொண்டியிருக்கிறது
சிலநேரம் குறைப்பிரசவமாகவோ
கருக்கலைப்பாகவோ…

அருமை .

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.