தொலைந்த மௌனம்




மேசையின் மீது உள்ள அலைபேசி ஒலி எழுப்பும்போதெல்லாம் மனது லேசாக திடுக்கிடும். காதும், வாயும் கூடவே சில சமயம் மனதும் பேசிப்பேசியே வலிக்கின்றன. வெறும் பத்து வருடங்களில் அலைபேசி நம்மை வெறித்தனமாக அடிமைப்படுத்தியதை மறுக்கவே முடியாது. காலை கண் விழிக்கும்போதே அழைப்பு வருகிறது, பல் துலக்கி காபி குடிக்கும்போதும் பல நேரம் பேசுகிறோம். நானெல்லாம் குளிக்கும் போதும் கூடவே எடுத்து செல்லுபவன். தட்டில் விழும் உணவின் நிறமும்அளவும் கூட சில நேரம் பேசும் (அ) சுவாரசியத்தில் தெரிவதில்லை. இதில் நல்ல வேலையாக சுவை குறித்து குறை கொள்ள நேரம் இல்லை. பார்த்த இடமெல்லாம் கை காதோடு அணைந்து கொண்டேயிருக்கிறது. யாரைப்பார்த்தாலும் பேச்சு பேச்சு என எல்லா நேரமும் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. ஏன் இப்படி பேசுகிறோம், எதை அடைய இப்படி பேசுகிறோம். சரி பேசிப்பேசி எதைத்தான் அடைந்துவிட்டோம்? பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன் நினைத்து பார்த்தால் நாம் இப்போது பேசுவதில் நூறில் ஒரு பங்குதான் பேசி இருப்போம். அப்பொழுதெல்லாம் தொலைபேசி அலுவலகத்தில் இருக்கும் அல்லது வீட்டில் இருக்கும். வீட்டில் இருக்கும் தொலைபேசில் பேசுவது சுகமான அனுபவம். பெரும்பாலும் உறவினர்கள்தான் வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பது வழக்கம். குடும்பத்தில் உள்ள அனைவரும் மாற்றி மாற்றி பேசி மகிழ்வார்கள். ஆனால் இன்று அலைபேசி ஆறாவது விரலாக நம்முடன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் பேசுகிறோம். ஆனால் எதை அடைய இத்தனை பேசுகிறோம்?. தொடர்ந்து பேசி மனதிற்குள் இருந்த அழகிய மௌனத்தை கொன்று விட்டதை ஒரு போதேனும் உணர்ந்திருக்கிறோமா?. தனிமை என்பதே மறந்துவிட்டது. தொலைந்து போன மௌனத்தை கொஞ்சம் தேடித்தாருங்களேன், அதற்குள் படபடக்கும் அலைபேசிக்கு பதில் சொல்லி விட்டு வருகிறேன்...........

4 comments:

கண்ணகி said...

avasara ulakaththil nam mavunangkaL tholainthuthaan poivittathu. veRRuppechchukaLthaan.

தீபா நாகராணி said...

பழகினா பாலும் புளிக்கும்னு சொல்றாங்க... அது ஏன் இந்த செல் போன், facebook க்கு எல்லாம் பொருந்த மாட்டேது ?

Dr. Hariharan said...

இப்போ கொஞ்சம் பேசுறது கம்மியாயிருக்கும்னு நிணைக்கிறேன். fbலே தான் ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸோட கும்மியடிக்கிறோமே. முன்னாடியாவது சொந்தக்காரன், நண்பன் எல்லாம் என்ன செய்யறாங்கங்கறத்துக்காகவே ஃபோன் செய்வோம். இப்போ fb profile பாத்து ஈஸி யா தெரிஞ்சுக்கறோம். இப்போ செல், fb ரெண்டும் லைஃப டிஸ்டர்ப் பண்ணுது

Unknown said...

அருமை அண்ணா